மேய்ச்சல்லுடன் கூடிய கொட்டில் முறை



    அதிக எண்ணிக்கையில் கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க விரும்புவோருக்கு மேய்ச்சல் முறை பயனுள்ளதாக இருக்கும். நாட்டு கோழிகளை பகல் வேளையில் மேய்ச்லுக்கு விட்டு இரவில் கொட்டிலில் அடைப்பது மேய்ச்சலுடன் கூடிய கொட்டில் முறை ஆகும்.

நாட்டு கோழிகளை மேய்ச்சல் வளர்க்கும் போது அதற்குரிய குணங்களோடும், இயற்கையான தீவனம் எடுப்பதால் கோழிகள் ஆரோக்கியமாகவும் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி மிக்கதாகவும் வளரும்.

மேய்ச்சல் முறையில் தீவனமே கொடுக்க வேண்டாம் கோழிகளை அப்படியே வாங்கி மேய விட்டா போதும்னு நினைக்க வேண்டாம். மேச்சலுடன் கூடிய கலப்பு தீவனம் கொடுக்கும் போது கோழிகள் விரைவில் நல்ல வளர்ச்சி அடையும். பகல் முழுவதும் வெளியில் மேயவிட்டு இரவில் அடையும் போது அடர்தீவனம் கொடுக்கலாம். கோழி தீவனம் வெளியில் வாங்குவதை விட நாமே தயாரிக்கும் போது செலவு குறைவாக இருக்கும்.