அசில் (நாட்டுக்கோழி இனங்கள்)


    அசில் கோழி இந்தியாவின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாகும். ஆந்திராவை தாயகமாக கோண்டது. உண்மை அல்லது தூய்மை என்பதே அசில் என்பதின் பொருளாகும்.

    அசில் சக்தி வாய்ந்த, உறுதியான, திடமான ெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இவ்வினம் திடகாத்திரமான , மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.

    அசில் பெரும்பாலும் சண்டைககவும் இறைச்சிக்காகவும் வளர்கபடுகிறது. இதன் அலகு குட்டையாகவும் , வளைந்தும் காணப்படும் . முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், வால் சிறியதாகவும் , தொங்கி கொண்டு காணப்படும். கால்கள் உயரமானவை மற்றும் உறுதியானவை.

சேவல் உடல் எடை : 3 - 4 கிலோ
பேட்டை கோழி எடை : 2 - 3 கிலோ
ஆண்டு முட்டை உற்பத்தி : 90 - 100
கருவுறும் திறன் : 66%
குஞ்சு பொரிக்கும் திறன் : 63%