சிறுவிடை தமிழகத்தின் கோழி இனம் என்று அறியப்படுகின்றன. இக்கோழிகள் தமிழகத்தின் சில இடங்களில் குருவுக் கோழிகள் எனவும், சில இடங்களில் சித்துக் கோழிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
சிறுவிடை சேவல்கள் அதிகபட்சமாக இரண்டு கிலோ எடையும், கோழிகள் அதிகபட்சமாக ஒன்றரைக் கிலோ எடையும் உடையன. இக்கோழிகள் ஒரு ஈத்திற்கு 10-14 முட்டைகள் வரை இடுகின்றன. பெரும்பாலான முட்டைகளை பெறிக்கும் திறன் பெற்றவையாகவும், குஞ்சுகளை பிற எதிரிகளிடமிருந்து காக்கும் திறன்பெற்றவையாகவும் அறியப்படுகின்றன. வளர்ப்பாளர்கள் சிறுவிடையை அதிக தாய்மையுணர்வை கொண்டவையாக கூறுகின்றார்கள். சிறுவிடை முட்டை சராசரியாக 35-40 கிராம் எடை கொண்டதாக உள்ளன.
முருகனின் கொடியில் இவ்வகை சிறுவிடை சேவல் இடம் பெற்றுள்ளது. சிறுவிடை சேவல்களின் தொன்மைக்கு சான்றாக இதனை கருதுவோரும் உண்டு.
அடைகாக்க சிறுவிடை கோழிகளை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் குஞ்சுகளை மிதிக்காமல் மற்றும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.