கொட்டில் அமைக்கும் முறை

   

    கோழிகளின் எண்ணிக்கையை பொறுத்து கொட்டிலின் அளவு மாறுபடும். ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகித அடிப்படையில் கொட்டில் இருக்க வேண்டும். கொட்டில் மேற்கிலிருந்து கிழக்காக இருக்க வேண்டும். 

கொட்டிலின் தரையில் இருந்து ஒன்றரை அடிக்கு விஷ மிருகங்கள் வராத அளவுக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும். மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சுற்றி சுவராலும் மற்ற பகுதியில் வலையாலும் நாட்டுக் கோழிக்கான் கொட்டிலை அமைக்கலாம். அல்லது நான்கு பக்கமும் வலை அமைக்கலாம்.




      கொட்டிலின் அகலம் அதிகபட்சம் 22 முதல் 25 அடி வரை இருக்கலாம். அதற்கு மேல் போகும் போது கோழிகளுக்கு தேவையான காற்றொட்டம் இல்லாமல் போகும். கொட்டில் அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லாமல் இருக்க வேண்டும்.




கொட்டிலின் தரைப்பரப்பில் ஒன்றரை அடிக்கு தென்னை நார், உமி அல்லது கடலைப்பொட்டை போட்டு பரப்ப வேண்டும். கோழி மேய்ச்சலுக்கு போகும் போது இந்த தினமும் இதை கிளறி விட வேண்டும். கொட்டிலில் எப்போதும் தண்ணீர் மற்றும் உணவு இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும்.