அறிமுகம்

    
நாட்டுக்கோழிகள் தொன்று தொட்டு நம் மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. கிராமங்களில் கோவிலில் பலி இடுவதற்கும், சேவல் கட்டிற்கும் மற்றும் உணவு தேவைக்காகவும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளனர். நாட்டுக்கோழிகளை திருமண சீதனமாக கொடுக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. அந்த அளவுக்கு நாட்டுக்கோழிகள் நாம் கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளன.

நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் ஏதிர்பாரத பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. நமது உடல் அலுப்பை போக்கவும், புத்துணர்வு பெறவும் நாட்டுக்கோழியை நல்லெண்ணையில் சமைத்து சாப்பிடலாம். மேலும் இளம் தாய்மார்களுக்கு நாட்டுக்கோழியை அடிக்கடி சமைத்து கொடுக்கும் பழக்கமும் இருந்து வருகிறது.

இருப்பினும் நாட்டுக்கோழியை யாரும் பெரிதாக வளர்க்காததலும், சந்தைப்படுத்தல் இல்லாததலும் இறைச்சிக்கான சந்தையில் ப்ராயிலர் கோழி அதிக இடத்தை பிடித்தது. தற்போது ப்ராயிலர் கோழிகளால் வரும் பிரச்சனைகளை தொடர்ந்து மக்களின் கவனம் மீண்டும் நாட்டுக்கோழி பக்கம் திரும்பி உள்ளது. எனவே நாட்டுக்கோழி வளர்ப்பும் சந்தைப்படுத்துதலும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

நாட்டுக்கோழிகளில் நாற்பத்திற்க்கும் அதிகமான இனங்கள் இருந்தாலும் சிறுவிடைக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி (அ) அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக், கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி ஆகிய இனங்கள் தான் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டுக்கோழிகள் சராசரியாக பதினைந்து ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டவை. நாட்டுக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது, குடல் பகுதியில் உள்ள கற்குடலால் உணவை செரிக்கின்ற

நாட்டுக்கோழிகளின் உடல் வெப்பநிலை 41.7 டிகிரி செல்சியஸ். இவை நாற்பது முதல் ஐம்பது அடி வர பறக்கும் திறன் கொண்டவை. நாட்டுக்கோழிகள் வெளிச்சத்தில் மட்டுமே உணவு எடுக்கும் பழக்கம் கொண்டவை, இரவு நேரங்களில் இவை அடைய துவங்கி விடுகின்றன.